அஜித் நிவாட் கப்ராலின் வெற்றிடத்துக்கு ஜயந்த கெட்டகொட

இந்த செய்தியை பகிருங்கள்!

மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யு.டி.லக்ஷ்மன் இன்னும் இரண்டு தினங்களில் தமது பதவியிலிருந்து விலக உள்ள நிலையில், அஜித் நிவாட் கப்ரால் மீள அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்காக அஜித் நிவாட் கப்ரால் தமது நாடாளுமன்ற உறுப்புரிமையில் இருந்து விலக உள்ளார்.

இதையடுத்து வெற்றிடமாகும் தேசியப் பட்டியலின் நாடாளுமன்ற உறுப்புரிமைக்கு, முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொடவை மீண்டும் நியமிப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அவதானம் செலுத்தியுள்ளது.

பசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க வாய்ப்பளித்து, ஜெயந்த கெட்டகொட தமது நாடாளுமன்ற உறுப்புரிமையில் இருந்து விலகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..