அட தம்பி நவநீதன் !

இந்த செய்தியை பகிருங்கள்!

அட தம்பி நவநீதன்

நீ நம்மட முறக்கொட்டான்சேனை குழந்தைவேல் அண்ணன்ட மகனடா? முறக்கொட்டான்சேனையில 1970 ஆண்டு காலப்பகுதியில ரெண்டு குழந்தைவேல் இருந்தவங்க,இரண்டு பேரும் எனக்கு அண்ணன் முறதான் ஒருவர் சாஸ்திரமும் சொல்லுவார். அந்த குழந்தைவேல் அண்ணட மகனாடா தம்பி நீ

அவங்க ரெண்டு பேரும் தமிழரசுக் கட்சி தூணுகள் தானே. அதாவது தந்தை செல்வாவின் கொள்கையை அந்த நாளிலேயே ஏற்றுக்கொண்டு விசுவாசமாக இறுதி வரை வாழ்ந்தவர்கள் அவர்கள் மட்டும் அல்ல வைரமுத்து பெரியப்பா,செல்லத்துரை அத்தான், கோபால் சீனியப்பா, ஸ்பீக்கர் மோகன், குகதாசன் அண்ணன், இப்ப இவர் மாமாங்கத்தில் இருக்கிறார். இவங்கதான் முறக்கொட்டான்சேனையில தமிழரசுக் கட்சி தூணுகளாக இருந்து அண்ணன் ராஜதுரையையும், மாணிக்கவாசகரையும்,சம்பந்த மூர்த்தி அண்ணனையும் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற ஆசனங்களை வெல்வதற்கு அரும் பாடுபட்டவர்கள். 1972 ம் ஆண்டு காலப்பகுதியில இவர்களின் ஒத்தாசையோடுதான் தமிழர் கூட்டணி உருவாகியது. அந்த நேரம் வைரமுத்து பெரியப்பா வீட்டதான் அமிர்தலிங்கம் அண்ண உட்பட தமிழரசுக் கட்சியினருக்கு சாப்பாடு குடுத்தவங்க.

பிறகு வைரமுத்து பெரியப்பா K .W. தேவநாயகத்தாரோடு U. N .P கட்சியில சேர்ந்த நேரம் உன்ர அப்பர் குழந்தைவேல் அண்ணன்தான் அவரோட எதிர்த்து நின்று சண்டை பிடிச்சவர்.அப்படிப்பட்ட குழந்தைவேல் அண்ணன்ட மகனா தந்தை செல்வாவைப்பற்றி என்னவோ எழுதி இருக்கிறா அட தம்பி தந்தை செல்வாவின் கொள்கையை கிழக்கு மாகாணத் தமிழர்கள் ஏற்று எழுபது வருடங்களுக்கு மேல போயித்துடா தம்பி உனக்கு இப்பதான் தந்தை செல்வாட சில கண்ணுல பட்டிருக்கு போல 25 வருடங்களாக மட்டக்களப்பின் முடி சூடா மன்னனாக இருந்த இராஜதுரையையும் , மு .இராசமாணிக்கத் தையும்,கனகசபை ஜெயானந்த மூர்த்தி,அரியநேந்திரன் ஏன் சாணக்கியனைக்கூட தந்தை செல்வாவின் தமிழரசுக் கட்சியின் வேட்பாளராக பாராளுமன்றத்துக்கு அனுப்பியதும் மட்டக்களப்பு மக்கள் தானடா தம்பி.

அது மட்டுமல்ல உங்களால் ஆலய வழிபாட்டின் போது சுட்டுக்கொல்லப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோசே ப் பரராஜசிங்கமும் தமிழரசுக் கட்சிசார்பில் தெரிவு செய்யப்பட்டவர்கள்தான்.
நம்மட சம்புக்குட்டி பெரியப்பாடா மகன் தான் ஜெயந்தன் கரும்புலியாக வெடித்தது. உனக்கு தெரியுமோ என்னவோ இது விடுதலை வரலாற்றில் முறக்கொட்டான்சேனைக்கு கிடைத்த பெருமை .

நல்லையா மாஸ்டர் K .W .தேவநாயகம்,ராஜன் செல்வநாயகம்,போன்றவர்களால் கூட மட்டக்களப்பில் தந்தை செல்வாவின் கொள்கையில் ஊறிய மக்களிடம் ஒரு மயி………. புடுங்க ஏலாமல் போய் விட்டது. பாவம் கூலிக்கு எழுதும் குழந்தைவேல் அண்ணன்ட மகனுக்கு அரசியல் அறிவு இவ்வளவு தான?

தந்தை செல்வாவின் சிலை நிறுவப்பட்டு நான்கு வருடங்கள் ஆகின்றது. இந்த நான்கு வருடங்களும் உனக்கு அம்மாவாசை இரவாகத்தான் இருக்கின்றதா? தந்தை செல்வாவின் சிலை உனக்கு அவமானனச் சின்னமாக தெரிகின்றதா? குழந்தைவேல் அண்ணனுக்கு இப்படியானோரு அவமானச் சின்னம் இருப்பதை யிட்டு நானும் நமது ஊரும் வெட்கப்படுகிறது.
சிலை அகற்றப்படும் நாள் தான் மட்டக்களப்பானுக்கு விடிவு நாள் என்று எழுதியிருக்கிறாய். மட்டக்களப்பானுக்கு 70பது என்பது வருடங்களுக்கு முன்பே விடிந்து விட்டது. பாவம் உனக்குத்தான் விடிவு நாளே இல்லை.

தம்பி நவநீதன் நம்மட ஊருல ஒரு பழமொழி சொல்வாங்க நக்கிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கம் என்ன எல்லாம் ஒன்றுதான் இப்ப வாவது தெரிஞ்சு கொள்ளு

வேல்வேந்தன்

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..