கடல்தாண்டிச் சொல்கின்ற அஞ்சலிகள்.
கண்முடித் துயில்கின்ற அன்னைக்கு
கடல்தாண்டிச் சொல்கின்ற அஞ்சலிகள்.
மீன்பாடும் தேன்நாட்டில்
மிடுக்கான ஓர் குடும்பம்
கல்வியிலே உயர்ந்தும்
கற்றறிந்த பண்பினிலே சிறந்ததும்
சுற்றமெல்லாம் கூடிநிற்க
சுதந்திரமாய் வாழ்ந்தவர்கள்
இனமுறுகல் ஏற்பட்ட
எண்பத்திமூன்றின் பின்னால்
ஏதிலியாகச்சென்று எங்கேயோ வாழ்ந்தவர்கள்
மூன்று பிள்ளைகளில் மூத்தவள்
குண்டடியில் காயமுற்றாள்
இந்தியாவில் படித்த இரண்டாம் மகன்
புலிப்படையில் சேர்ந்து போராளி ஆகிவிட்டான்
அமைதிப்படையை நம்பி அனைவருமே மீண்டும் வந்துவிட்டார்கள்.
அமைதி குலைத்து அவர்கள்
அநியாயம் செய்தார்கள்
இரண்டாம் கட்ட ஈழப்போர்
இங்கெல்லாம் வெடித்தபோது
எரிதழலால் இவர்களின்
இருப்பிடத்தை அழித்து விட்டார்கள்.
ஏதிலிகள் வாழ்க்கை
இம் முறையும் வந்ததினால்
சொந்த இடம் விட்டு தூர தேசம் சென்றுவிட்டார்.
அன்னை அவள் அந் நாளில்
அனைவரையும் அணைத்ததனால்
கண்ணீரை இன்று காணிக்கை ஆக்குகின்றோம்.
மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட முன்னாள் போராளிகள்