மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் இருபாலையை வதிவிடமாகவும், ஜேர்மனி Oberhausen ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பாலிப்போடி இளையபோடி திருநாவுக்கரசு அவர்கள் 10-11-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான இளையபோடி இராச மனோன்மணி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற கனகராஜா, இராசமணி(இருபாலை) தம்பதிகளின் அன்பு மருமகனும், நிர்மலாதேவி(தேவி) அவர்களின் பாசமிகு கணவரும்,
சுதர்சன், வினோத் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிறானி அவர்களின் அன்பு மாமனாரும்,
கங்கேஸ்வரி புஸ்ப ஜெயந்தி, இந்திரசேனன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தவராஜா, றஞ்சிதமலர், சுரேந்திர ராஜா, விஜயமணி, செல்வராஜா, காலஞ்சென்றவர்களான ஆனந்தராஜா, நித்தியராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பத்மநாதன் வசந்தகுமாரி தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும், லெவின், லியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
சுதர்சன் – மகன்Mobile : +4917647330582 நிர்மலாதேவி(தேவி) – மனைவி Mobile : +4917673862400