அம்பாறை மாவட்டத்திற்கு கொவிட்-19க்குப் பொறுப்புத் தலைவர் மேஜர் ஜெனரல் திலக் வீரகோன். சம்மாந்துறை பாடசாலை அதிபர்கள் மத்தியில் உரை

இந்த செய்தியை பகிருங்கள்!

( வி.ரி.சகாதேவராஜா)

கொவிட் வைரஸ் பரவல் பாடசாலைகளில் பரவுவதைத் குறைத்தல் சம்பந்தமான கூட்டம் நேற்று சம்மாந்துறை அல்-மர்ஜான் மகளிர் தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல் நஜீம் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வுக்கு அம்பாறை மாவட்ட கொவிட்-19க்குப் பொறுப்புத் தலைவரும் 24 படைப்பிரிவுக் கட்டளைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் திலக் வீரகோன் சமூகம் தந்து அதிபர்களுக்கு ஆலோசனைகள்வழங்கி அதன் பிரகாரம் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக பாடசாலைகளை நடாத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டது.

கொவிட் வைரஸ் பரவல் பாடசாலைகளில் பரவுவதைத் குறைத்தல் சம்பந்தமாக அம்பாறை மாவட்ட கொவிட்-19க்குப் பொறுப்புத் தலைவரும் 24 படைப்பிரிவுக் கட்டளைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் திலக் வீரகோன் பூரண விளக்கமளித்தார். அதிபர் ஆசிரியர் பெற்றோர் ஆகிய தரப்புகளுக்கான பொறுப்புகள் பற்றியும் எடுத்துரைத்தார்.
உதவிகள் தேவைப்பட்டால் தன்னை நாடலாம் எனவும் தெரிவித்தார்.

கூட்டத்தில் சம்மாந்துறை வலய பாடசாலைகளின் அதிபர்கள் சுகாதாரமுறைப்படி கலந்துகொண்டார்கள்.

Subscribe

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..