இன்று தமிழ் தேசிய துக்க தின பிரகடனம்

இந்த செய்தியை பகிருங்கள்!

(காரைதீவு சகா)

மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் வண. பிதா இராயப்பு ஜோசப்ஆண்டகை கடந்த 1ஆம் திகதியன்று இயற்கை எய்திய செய்தியானதுதமிழர் தேசத்தினை ஆழாத்துயரில்ஆழ்த்தியுள்ளது. ஆயர் அவர்களின்இழப்பானது தமிழர் தேசத்திற்குஅளவிடமுடியாத ஒரு பேரிழப்பாகும். அவரின் இழப்பால் தமிழ்தேசியம் ஒரு சிறந்ததலைவனை இழந்து நிற்கின்றது.

ஆண்டகை அவர்களின் மறைவையொட்டி அவரால்தமிழ் தேசியத்திற்கு ஆற்றியசேவைகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக இன்று திங்கட்கிழமை (05) தமிழ்தேசிய துக்க தினமாகப் பிரகடனபடுத்தப்படுத்துகின்றோம் என்று பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் தொடக்கம் வடக்கு கிழக்கு பொது அமைப்புகள் மற்றும் சம்மேளனங்கள் வரையிலான 18அமைப்புகள் வேண்டுகொள்விடுத்தள்ளன.

இதற்கு தமிழ்தேசிய கட்சிகள் பொதுமக்கள் அனைவரும் ஆதரவுவழங்குவதுடன் திங்கட்கிழமை அனைவரும் தங்களின்வீடுகளிலும் பொது இடங்களிலும் வணிக நிலையங்களிலும் கறுப்புகொடிகளை பறக்கவிட்டும் உங்கள்உடைகளில் கறுப்பு பட்டிகளை அணிந்தும்துக்கத்தை வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம். அதே நாளில்தமிழகம் மற்றும் புலம்பெயர்தேசம்எங்கும் வாழும் தமிழ்மக்களும் கறுப்புப்பட்டி அணிந்து தங்கள் துக்கத்தைவெளிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தமிழரின் உரிமைக்காக மதங்களை கடந்துதேசியத்தின் பால் ஓங்கிஒலித்த குரலை தமிழர்தேசம் இன்று இழந்துநிற்கின்றது . 2009 ம் ஆண்டுயுத்தம் மெளனிக்கபட்ட பின்தமிழர் தேசம் திக்கற்றவர்களாகநின்ற நேரம் அவர்களுக்குநம்பிக்கை ஒளியாக விளங்கியவர். தமிழினத்தின் மீதான இனப்படுகொலையை, இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டபொது மக்களின் எண்ணிக்கையைபல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியிலும்பொது வெளியிலும் சர்வதேசத்திலும்அறுதியிட்டு தெரிவித்தவர். பாதிக்கப்பட்ட தமிழினத்தின்நீதி குரலாகஇ சாட்சியாகஇருந்த மிகப்பெரும் ஆளுமையைநாம் இன்று இழந்துநிற்கின்றோம் என இவ் ஊடகஅறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் வட-கிழக்கு சிவில் சமூக சம்மேளனம் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம்
அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு பல்சமயங்களின் ஒன்றியம் மட்டக்களப்பு முதியோர் சம்மேளனம் மட்டக்களப்பு வெண்மயில் அமைப்பு மட்டக்களப்பு
அமெரிக்கன் மிஷன் மட்டக்களப்பு சடோ லங்கா நிறுவனம் மட்டக்களப்பு அரச சாரா தொண்டு நிறுவனங்களின் இணையம் தமிழர் நலன் காப்பகம் மட்டக்களப்பு சிவகுரு ஆதீனம் யாழ்ப்பாணம்
தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு மட்டக்களப்பு புழுதி சமூக உரிமைக்கான அமைப்பு திருகோணமலை குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு உலக தமிழர் மாணவர் ஒன்றியம் இராவண சேனை திருகோணமலை வடக்கு கிழக்கு பொது அமைப்புகள் மற்றும் சம்மேளனங்கள் ஆகிய 18அமைப்பகளே மேற்படி வேண்டுகோளை விடுத்துள்ளன.

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..