இறுதி யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலை கடந்து சென்றிருந்தால் எங்களுடைய வலிகளும், ஆதங்கங்களும் சுமந்திரனுக்கு புரிந்திருக்கும்

இந்த செய்தியை பகிருங்கள்!

வலிகளையும், வேதனைகளையும் சுமந்திருந்தால், இறுதி யுத்தத்தின்போது
முள்ளிவாய்க்காலை கடந்து சென்றிருந்தால் எங்களுடைய வலிகளும்,
ஆதங்கங்களும் சுமந்திரனுக்கு புரிந்திருக்கும் என வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவயிலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்க்ப்பட்டவர்களின் சங்க தலைவி கனகரஞ்சினி கரு்தது தெரிவித்தார்.

இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற சாட்சியங்கள் போதாது என சுமந்திரன் தெரிவித்த விடயம் தொடர்பில் ஊடகவியலாளர் அவரிடம் வினவியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சுமந்திரன் அவர்கள் எங்களோடு குறுகிய காலத்தில் தேசியத்தோடு
பயணிக்கின்றவர்களை ஒன்றிணைத்து பேசிக்கொண்டிருந்தோம். அந்த வேளையில் அவர் எங்களோடு பேசும்போது எங்களின் உண்மையான தேடல் உள்ளிட்ட விடயங்களை அவருக்கு தெளிவுபடுத்தியிருந்தோம். ஆனால் அவர் புரிந்துகொண்டு புரியாதது போல்
நடிக்கின்றார்.

உண்மையாகவே அவர் எங்களோடு பேசும்போது இருந்த அந்த தன்மையும், ஜெனிவா
கூட்டத்தொடர் நடக்கின்றவேளையில் அந்த கூட்டத் தொடருக்கு அவரிடம் நாங்கள்
ஒருசில விடயங்களை முன்வைக்கின்றபோது, எங்களோடு சார்ந்தவர்கள், அவரோடு
இணைந்து பேசியவர்கள் முன்வைக்கின்றபோது, அதிலிருந்து அவர் நழுவி அந்த
விடயங்களிற்கு அவர் தயாராக இருந்திருக்கவில்லை என்பதனையும் நாங்கள்
விளங்கிக்கொண்டிருக்கின்றோம்.

உண்மையிலேயே சுமந்திரன் ஒரு கட்சி சார்ந்தவராகவும், பாராளுமன்ற
உறுப்பினராகவும், ஒரு கட்சியினுடைய பேச்சாளராகவும் இருக்கலாம். ஆனால்
இந்த வலிகளையும், வேதனைகளையும் சுமந்திருந்தால், இறுதி யுத்தத்தின்போது
முள்ளிவாய்க்காலை கடந்து சென்றிருந்தால் எங்களுடைய வலிகளும்,
ஆதங்கங்களும் அவருக்கு புரிந்திருக்கும். அவர் தமிழ் பேசுபவராக
இருந்தும்கூட தன் இனத்தின், மொழியின் பற்று இல்லாமல் பேசிக்கொண்டு
இருப்பதாக நாங்கள் அறிகின்றோம்.

அதன் உண்மைத்தன்மை எவ்வளவு என்பது எமக்கு விளங்கவில்லை. ஏனென்றால்
நாங்கள் தாய்கள். நாங்கள் புரிந்துகொண்டு ஆதங்கங்களை
வெளிப்படுத்திக் கொண்டிருக்கும்போது எமக்கோ அல்லது எமது போராட்டத்திற்கோ
இடையூறாக எவர் வந்தாலும் அவர்களை நாங்கள் தட்டிக்கேட்போம் என அவர்
தெரிவித்தார்.

யுத்த குற்றங்கள் மற்றும் சாட்சியங்கள் உங்களால் வழங்கப்பட்டது என
கூறியுள்ளீர்கள். அவை போதுமானதாக உள்ளதா என ஊடகவியலாளர் அவரிடம்
வினவினார்.

அதற்கு பதிலளித்த கனகரஞ்சினி,

ஏற்கனவே நாங்கள் உண்மை சாட்சியங்களை முன்வைத்திருக்கின்றோம். ஆதாரங்களுடன் நாங்கள் ஜெனிவா முற்றத்திலே 1000 கோவைகளை சாட்சியங்களுடன் கொண்டுபோய் ஒப்புவித்திருக்கின்றோம். சாட்சியங்களாக அங்கு போய் பேசிக்கொண்டும் இருக்கின்றோம். இந்தளவு தெரிந்துகொண்டும் சரியான ஆதாரங்கள், போர்குற்ற ஆதாரங்கள் இல்லையென்று சொல்லுகின்ற இந்த வேளையிலே சர்வதேசத்திலே இருக்கின்ற அந்த பிரதிநிதிகள், அந்தந்த நாட்டு பிரதிநிதிகள் எங்களிற்காக அங்கு குரல் கொடுக்கின்றார்கள்.

சர்வதேசத்திலே இருக்கின்ற எங்கள் உறவுகள் அங்கே குரல் கொடுக்கின்றார்கள்.
அவர்கள் மற்றவர்களைப்புால் தப்பினோம் பிழைத்தோம் என்று இரு்திருந்தால்
இ்று நாங்கள் சர்வதேசத்தில் போய் பேசக்கூடிய நிலை இல்லாது இருந்திருக்கும். வலிகளையும், வேதனைகளையும் சுமந்த உறவுகள் எமக்க பக்க
பலமாக இருந்துகொண்டு எங்களுக்காக பேசிக்கொண்டு வழிநடத்தியும், எங்களுடைய
பாதையிலே செல்கின்றபடியினாலே சர்வதேச நாடுகளே எங்களை திரும்பி
பார்க்கின்ற அளவிற்கு இன்று இருப்பதற்கு இந்த போராட்டமும் தேடலும்
இருக்கின்றது என்பதை ஊடக வாயிலாக சுமந்திரனிற்கு சொல்லிவைக்க
விரும்புகின்றேன் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..