இலங்கையில் ஒரே நாளில் 26பேருக்கு கொரோனா!

இந்த செய்தியை பகிருங்கள்!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

நேற்று (சனிக்கிழமை) மாத்திரம் 26பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,195ஆக அதிகரித்துள்ளது.

கட்டாரில் இருந்து நாடு திரும்பிய 22 பேரும் குவைட்டில் இருந்து வருகைத் தந்த 2 பேரும் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நாடு திரும்பிய இருவருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள 200பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 14 பேர் நேற்று குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,983 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் இதுவரை 12பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..