உடும்பன்குளம் படுகொலை!

இந்த செய்தியை பகிருங்கள்!

ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் மக்கள் விவசாய நிலங்களில் அறுவடை செய்யும் காலமாகும். உடும்பன் குளத்தில் தங்களது வயல்களில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் கொட்டகை அமைத்து வயல் வேலைகள் முடியுமட்டும் அங்கேயே தங்கியிருந்து தமது அறுவடையினை முடித்துக்கொண்டு நெல் மூட்டைகளுடனேயே திரும்புவது வழக்கமாகும். இவ்வாறே 1986 ஆம் ஆண்டு மாசி மாதமும் வயல்களில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களது பிள்ளைகளுடன் தங்கியிருந்து வயலில் அறுவடை செய்து கொண்டிருந்தார்கள்.

1986.02.19 அன்று காலை 6.30 மணியளவில் கொண்டைவெட்டுவான் இராணுவ முகாமிலிருந்து கவச வாகனங்களில் வந்த இராணுவத்தினரால் உடுப்பன்குள வயல்களில் அறுவடை செய்து கொண்டிருந்தவர்களும், அங்கு தங்கியிருந்தவர்களும் சுற்றி வளைக்கப்பட்டார்கள். இவர்கள் அனைவரும் இராணுவத்தினராற் கைது செய்யப்பட்டு கைகள், கண்கள் கட்டப்பட்டார்கள். இவ்வாறு கைது செய்தவர்களில் பெண்கள் இராணுவத்தினராற் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டார்கள். ஆண்களின் ஆண் உறுப்பு வயலில் நெல் வெட்டுவதற்கு பயன்படுத்தப்படும் அரிவாளினால் வெட்டப்பட்டது. இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட அனைவரும் மிகவும் மோசமான முறையில் துன்புறுத்தப்பட்டார்கள். பலர் இராணுவத்தினரின் துன்புறுத்தலினாலேயே தமது உயிரினை இழந்தார்கள். பின்னர் எஞ்சியிருந்தவர்களைச் சுட்டும், வெட்டியும் படுகொலை செய்ததுடன், அவர்களின் உடலினை அறுவடை செய்யப்பட்ட நெற்சூட்டினுள் ஒன்றாகப் போட்டு எரித்தார்கள்.

இவ்வாறு 1986.02.19 அன்று காலை இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலில் வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள், வாடியில் தங்கியிருந்தவர்கள் என நூற்றுமுப்பத்துமூன்று பேரிற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தார்கள். இவர்களில் ஒரு சிலர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பியிருந்தார்கள்.

இரண்டு நாட்கள் கழித்து 21.02.1986 அன்று மட்டக்களப்பு பிரசைகள் குழு வணபிதா சந்திரா பெர்ணான்டோ, நாளேட்டாளர்கள் ஆகியோர் சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்று அரைகுறையாக எரிந்த நிலையிலிருந்த
தொண்ணூற்றெட்டுப் பேரினது உடல்களை எடுத்து அடக்கம் செய்தார்கள்.

உடும்பன் குளத்தில் வயல்களில் அறுவடை செய்து கொண்டிருந்தவர்கள் மீதான தாக்குதலை நடத்திய இராணுவத்தினருக்குப் பொறுப்பாக லெப்டினன்ட் சந்திரபால தலைமை தாங்கினார். இச்சம்பவத்தில் இராணுவத்தினருடன் இணைந்து முஸ்லீம் குழுக்களும் தாக்குதல்களை நடத்தியிருந்தார்கள்.

19.02.1986 அன்று உடும்பன்குளம் படுகொலையில் கொல்லப்பட்டோர் விபரம்:

01. இராசையா தவேந்திரன் (வயது 18)
02. இராமசாமி கந்தையா (வயது 48)
03. ந.கோபாலகிருஸ்ணன்
04. ந.விநாயகமூர்த்தி
05. க.பாக்கியராஜ்
06. கதிரேசப்பிள்ளை வைரமுத்து
07. குமரவேல் நாகராசா (வயது 27)
08. கணேசமூர்த்தி பேரின்பன் (வயது 28)
09. கணேசபிள்ளை மோகனராசா (வயது 22)
10. கணபதி வடிவேல் (வயது 27)
11. பத்மநாதன்.
12. மைலன் தியாகராசா (வயது 18)
13. தர்மன் (வயது 22)
14. தாசப்பு செபமாலை
15. தாசப்பு செல்லையா
16. துரை இராமலிங்கம்
17. தம்பிப்பிள்ளை குமாரவேல்
18. மயில்வாகனம் தியாகராசா (வயது 13)
19. மார்க்கண்டு ரவீந்திரன்
20. முத்துப்போடி சுமனாவதி
21. முத்துசாமி முத்துலிங்கம்
22. மசன்னா ஜெயராஜ்
23. ஆ.நல்லதம்பி
24. ஆ.சோமசுந்தரம்
25. பொன்னன் இராசதுரை
26. பொன்னம்பலம் யோகராசா (வயது 18)
27. சோமசுந்தரம் கருணாநிதி (வயது 21)
28. வெங்கிட்டன் குழந்தை
29. ஞானமுத்து புவனேந்திரன்
30. சுந்தரம் சின்னவன் (வயது 20)
31. சீனித்தம்பி
32. சீனித்தம்பி தவநாகன் (வயது 30)
33. சீனித்தம்பி அருள்செல்வன் (வயது 18)
34. சில்வஸ்ரார் இன்னாச்சி (வயது 32)
35. சுவாமி டேவிட் (வயது 29)
36. வயிரமுத்து சுந்தரலிங்கம்
37. வர்ணகுலசிங்கம் புண்ணியமூர்த்தி (வயது 21)
38. விஸ்வகேது இராசா (வயது 23)
39. ரங்கன் போல்

குறிப்பு:- இச்சம்பவத்தில் பாதிப்படைந்த அனைவரது பெயர் விபரங்களையும் பெறமுடியவில்லை.

மூலம்: தமிழினப் படுகொலைகள் 1956 – 2001 நூல்

இந்த செய்தியை பகிருங்கள்!

Leave a Reply

Your email address will not be published.

one + 2 =

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..