உலகளாவிய ரீதியில் இதுவரை கொரோனா எனும் கொவிட்19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 100 மில்லியனை (10 கோடி) கடந்துள்ளது.
வேர்ல்ட்ஓமீற்றர் இணையத்தளத்தின் தரவுகளின்படி உலகில் இதுவரைர 100,268,379 பேருக்கு கொவிட்19 தொற்று ஏற்பட்டுள்ளது.
ஆகக்கூடுதலாக அமெரிக்காவில் 25,860,869 பேருக்கும் இந்தியாவில் 10,677,710 பேருக்கும் பிரேஸிலில் 8,872,964 பேருக்கும் இத்தொற்று ஏற்பட்டுள்ளது.
உலகில் கொவிட்19 தொற்று ஏற்பட்டவர்களில் 2,148,561 பேர் உயிரிழந்துள்ளனர். அதேவேளை 72,271,478 பேர் குணமடைந்துள்ளனர்.