ஏறாவூரில் வயோதிபர் தூக்கிட்டு தற்கொலை

இந்த செய்தியை பகிருங்கள்!

ஏறாவூர் கொம்மாதுறைப் பகுதிலில் முதியவர் ஒருவர் நேற்று சனிக்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கொம்மாதுறை உடையார் வீதியைச் சேர்ந்த கணபதிபிள்ளை நாகராசா (வயது-70 ) என்பவரே வீட்டிற்கு அருகாமையில் உள்ள மரம் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த முதியவருக்கும் அவருடைய மகளுக்கும் இடையே ஏற்பட்ட தனிப்பட்ட குடும்ப தகறாறே தற்கொலைக்கு காரணம் என பொலீஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலீஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

இந்த செய்தியை பகிருங்கள்!

Leave a Reply

Your email address will not be published.

nineteen − 3 =

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..