ஒரு தொகுதி உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைப்பு

இந்த செய்தியை பகிருங்கள்!

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாளாந்த வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட தமது வாடிக்கையாளர்களின் நலன் கருதி LOLC HOLDINGS PLC நிறுவனம் ஒரு தொகுதி உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தது.

LOLC HOLDINGS PLCயின் கிழக்கு மாகாண வலயத் தலைவரின் பணிப்புரையின் கீழ் இவ் நிவாரணப் பணி முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு,திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் அன்றாடம் தமது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலையில் உள்ள 520 வாடிக்கையாளர்களுக்கு 2000 ரூபா பெறுமதியான இவ் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை,கிரான்,மாவடிவெம்பு , நாசீவன் தீவு, கரையாக்கன் தீவு,பருத்திச்சேனை,மற்றும் நாவற்குடாவிலும்,திருகோணமலை மாவட்டத்தில் மூதூர்,சீனன்வெளி.உப்பூரல்,நல்லூர்,சின்னகுளம்,தங்கபுரம்,மற்றும் சேருநுவர ஆகிய இடங்களில் உள்ள LOLC வாடிக்கையாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

இவ் சமுக சேவைப் பணியில் வாழைச்சேனை,மூதூர்.மட்டக்களப்பு ஆகிய LOLCநிறுவன கிளை உத்தியோகஸ்த்தர்களும் கலந்து கொண்டனர்.கொழும்பு LOLC தலைமை நிறுவனத்தின் ஆலோசனையின் பேரில் இவ் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இந்த செய்தியை பகிருங்கள்!

Leave a Reply

Your email address will not be published.

16 + twenty =

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..