கடந்த கால அட்டூழியங்களுக்கு பொறுப்புக் கூறலில்லாமைக்கெதிரான தீர்மானங்களுக்கு அமெரிக்காவின் நிலைப்பாடு!

இந்த செய்தியை பகிருங்கள்!

இலங்கையில் கடந்த கால அட்டூழியங்களுக்கு பொறுப்புக்கூறல் இல்லாமை தொடர்பாக கொண்டு வரப்படும் தீர்மானங்களை ஆதரிக்க ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையை ஊக்குவிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

மேலும் ஸ்ரீலங்காவிற்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் கொண்டு வரப்படும் பிரேரணைக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 46வது கூட்டத்தொடர் ஜெனிவாவில் நடைபெற்று வருகின்ற நிலையில் இன்று அமர்வில் உரையாற்றும் போதே அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் அண்டனி பிளிங்கன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சிரியா மற்றும் வட கொரியாவில் நடந்து வரும் மனித உரிமை மீறல்கள், இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற அட்டூழியங்களுக்கு பொறுப்புக்கூறல் இல்லாமை மற்றும் தென் சூடானின் நிலைமை குறித்தும் விசாரணை நடத்த வேண்டிய அவசியம் என அவர் தெரிவித்தார்.

அத்தோடு மீண்டும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையுடன் இணைந்துகொள்ள அமெரிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், 2018 ஜூன் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்காவை விலக்கிக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..