கமல்ஹாசன் போட்டியிடும் தொகுதி அறிவிப்பு

இந்த செய்தியை பகிருங்கள்!

2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று (12.03.2021) வெளியிட்டுள்ளார்.

அதில் கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார்.

சென்னை தி நகர் தொகுதியில் அக்கட்சியில் அண்மையில் இணைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ கருப்பையா போட்டியிடுகிறார்.

மக்கள் நீதி மையம் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கும் நடிகை ஸ்ரீபிரியா மயிலாப்பூர் தொகுதியிலும், மக்கள் நீதி மைய கட்சியின் துணைத் தலைவரான மகேந்திரன் சிங்காநல்லூர் தொகுதியிலும், ஆலந்தூர் தொகுதியில் நடிகர் ஆனந்த் பாபுவும், முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் அவருக்கு எதிராக தாசப்பராஜ் என்பவரும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அத்துடன் காலியாக இருக்கும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் அக்கட்சியின் சார்பில் சுபா சார்ல்ஸ் போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..