களுதாவளையில் உள்ள சிறுவர் இல்லமொன்றில் 22 பேருக்கு கோவிட் தொற்று

இந்த செய்தியை பகிருங்கள்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட களுதாவளையில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் 21 சிறுவர்கள் உட்பட 22பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து குறித்த இல்லம் மூடப்பட்டுள்ளது.

குறித்த இல்லத்தில் உள்ள மாணவர்கள் சிலருக்குக் காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் அவர்கள் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்குச் சென்றபோது அங்கு சில மாணவர்களுக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து ஏனைய சிறுவர்களுக்கும் அங்கு கடமையாற்றுபவர்களுக்கும் அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அங்கு 19பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனைகளில் மேலும் மூவர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்ட நிலையில் குறித்த சிறுவர் இல்லம் மூடப்பட்டுள்ளது.

குறித்த சிறுவர்கள் இல்லத்திலிருந்த 21 சிறுவர்களும் ஒரு விடுதி காப்பாளருமான 22 பேர் கோவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாகவும், ஏனையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..