காத்தான்குடியைச் சேர்ந்த 52 பேரிடம் குற்ற தடுப்பு பிரிவு வாக்கு மூலம் பதிவு

இந்த செய்தியை பகிருங்கள்!

காத்தான்குடியில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த சஹ்ரான் ஹாஷிமுடன் தொடர்பினை பேணி வந்ததாக அடையாளம் காணப்பட்ட 52 பேருக்கு எதிரான வாக்கு மூலங்களை, பயங்கரவாத குற்ற தடுப்பு பிரிவினர் வீடு வீடாக சென்று பதிவு செய்து வருவதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹரானின் பயிற்சி முகாம் மற்றும் அதனுடன் இணைந்த செயற்பாடுகளுடன் தொடர்புடைய காத்தான்குடியைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் என நூற்றுக்கு மேற்பட்டோரை கடந்த காலத்தில் பாதுகாப்பு படையினர் கைது செய்து, நீதிமன்றத்தின் அனுமதியுடன், தடுப்பு காவலில் வைத்து தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதில் 5 பேரை நீதிமன்றம் விடுதலை செய்தது. ஆனாலும், தொடர்ந்து பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினர், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மேற்கொண்டுவரும் விசாரணையின்போது, ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த சஹரானின் முகநூல் மற்றும் தொலைபேசி ஆகியவற்றின் ஊடாக தொடர்புகளை பேணிவந்த காத்தான்குடியைச் சேர்ந்த 52 பேரை அடையாளம் கண்டுகொண்டனர்.

இந்நிலையில் அவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யும் நடவடிக்கையை, நேற்று (சனிக்கிழமை) முதல் பயங்கரவாத குற்ற தடுப்பு பிரிவினர் ஆரம்பித்து, வீடுவீடாக சென்று அவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்து வருகின்றனர் என பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..