கிழக்கில் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

இந்த செய்தியை பகிருங்கள்!

கொரோனா அச்சத்தை கருத்திற் கொண்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்த கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகள், இன்று காலை 5:00 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி,
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட,
அக்கரைப்பற்று 05 கிராம சேவகர் பிரிவு,
அக்கரைப்பற்று 14 கிராம சேவகர் பிரிவு மற்றும்
அக்கரைப்பற்று நகர கிராம சேவகர் பிரிவு ஆகியன தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன்,
அட்டாளைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாலமுனை 01 கிராம சேவகர் பிரிவு,
ஒலுவில் 02 கிராம சேவகர் பிரிவு மற்றும்
அட்டாளைச்சேனை 08 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை,
ஆலையடிவேம்பு பொலிஸ்பிரிவுக்கு உட்பட்ட அக்கரைப்பற்று 8/1 கிராம சேவகர் பிரிவு,
அக்கரைப்பற்று 8/3 கிராம சேவகர் பிரிவு,
மற்றும்
அக்கரைப்பற்று 09 கிராம சேவகர் பிரிவு என்பனவும், தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக,
அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..