கிழக்கில் தேர்தல் வன்முறை- பெண் உட்பட 4 பேர் படுகாயம்!

இந்த செய்தியை பகிருங்கள்!

பொத்துவில் பிரதேசத்தில் தேர்தல் வன்முறை சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இதில் பெண் உட்பட நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த பகுதியில் பொதுத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சியின் ஆதரவாளர்கள், நேற்று (வியாழக்கிழமை)  இரவு தாக்கப்பட்டுள்ளனர்.

இதில் ஒரு பெண் உள்ளடங்களாக 4 பேர் காயமடைந்த நிலையில் பொத்துவில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் கபே அமைப்பு, பொத்துவில் பகுதியில் வன்முறை அதிகரிக்கலாம் எனவும்  பாதுகாப்பை அதிகரிக்க கூறியும் தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..