கேம் விளையாடிய மாணவனிடம் தாய் தொலைபேசியை பறித்ததால் தூக்கில் தொங்கிய மாணவன் , யாழில் சம்பவம்

இந்த செய்தியை பகிருங்கள்!

கைத்தொலைபேசியில் தொடர்ச்சியாக ஒன்லைன் விளையாட்டில் ஈடுபட்டு வந்த பாடசாலை மாணவன் ஒருவரிடம் அவரது தாயார் கைத்தொலைபேசியைப் பறித்தமையால் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.

இச் சம்பவம், சுழிபுரம் பிளவத்தைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வலிகாமம் கல்வி வலயத்துக்குட்பட்ட பண்ணாகம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் தரம் 09இல் கல்வி கற்கும் 14 வயதான மாணவனே இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக கைத்தொலைபேசியில் விளையாட்டில் ஈடுபட்டு வந்தமையால் மாணவனின் தாயார் அதைப் பறித்து வைத்துள்ளார். இதைச் சகிக்க முடியாத மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..