நாட்டுக்குள் வருகைதரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்வதற்கான முறையான வேலைத்திட்டம் ஒன்றை விரைவில் அமுல்படுத்த வேண்டுமென, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அவ்வாறு திட்டமொன்று வகுக்கப்படாவிட்டால், நாடு தழுவிய ரீதியில் கொரோனா வைரஸ் ஒழிப்புச் செயற்பாடுகளில் இருந்து, அடுத்த இரு வாரங்கள் விலகியிருக்க, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தீர்மானித்துள்ளனர் என, சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹன தெரிவித்துள்ளார்.
சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றாமலும், பொதுச் சகாதார பரிசோதகர்களின் கண்காணிப்பின் கீழ் இன்றியும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக நாட்டு மக்களைத் தனிமைப்படுத்தல் சட்டத்தை பாதுகாக்குமாறு (கடைப்படிக்குமாறு) ஆலோசனை வழங்க முடியாதுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.