கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் மக்கள் கூடும் பொது இடங்களில் தொற்று நீக்கி!

இந்த செய்தியை பகிருங்கள்!

ருத்ரா

மட்டக்களப்பு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்டதனையடுத்து பிரதேசத்தில் மக்கள் கூடும் பொது இடங்களில் தொற்று நீக்கி நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. வாழைச்சேனை துறைமுகம்,ஓட்டமாவடி மீன் சந்தைப் பகுதிகளில் இன்று பொலிசார் இவ் நடவடிக்கையினை மேற்கொண்டனர்.
தண்ணீர் பீச்சும் இயந்திரத்தின் உதவியுடன் இவ் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. பிரதேசத்திற்கான உதவி பொலிஸ் அத்தியட்ச்சகர் பீ.எம்.ஜெயசுந்திரவின் வழிகாட்டலின் கீழ் குறித்த சுகாதார நடவடிக்கைகள் முன்னெடுத்து வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்சய பெரமுன தெரிவித்தார்.
இவ் நடவடிக்கையில் சமூக ஆர்வலர் கலாநிதி முசாம்பிலும் கலந்து கொண்டார்.
பிரதேசத்தில் 11 பேருக்கான கொரோனா தொற்று உறுதிப் படுத்தப்பட்டுள்ளமையினை அடுத்து பொலிசார் மற்றும் சுகாதாரப் பிரிவினர் உசார் நிலையில் தங்கள் கடமைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..