சஜித் மற்றும் சுமந்திரன் ஆகியோரே நான் சிறைக்கு செல்ல காரணம், உண்மையை வெளியிட்ட ரஞ்சன் ராமநாயக்க

இந்த செய்தியை பகிருங்கள்!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தான் சிறையில் இருப்பதற்கான காரணம் – சஜித் பிரேமதாஸவும், எம்.ஏ. சுமந்திரனுமே என்று ரஞ்சன் ராமநாயக்க தன்னிடம் தெரிவித்திருந்ததாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று சபையில் கூறினார்.

எனினும் இந்தக் குற்றச்சாட்டை உடனடியாக நிராகரித்த எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ, ஆளுங்கட்சி முன்வைக்கின்ற குற்றச்சாட்டுக்களை ஹேன்சாட்டிலிருந்து நீக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.

அதேவேளை, ரஞ்சன் ராமநாயக்கவுக்கு விடுமுறை அளிக்குமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் சஜித் பிரேமதாஸ கோரிக்கை ஒன்றையும் முன்வைத்துள்ளார்.

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ரஞ்சன் ராமநாயக்கவுக்கான நாடாளுமன்ற விடுமுறையை கோருவதற்கான விசேட யோசனை ஒன்றை இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்யவிருப்பதாக அவர் தெரிவித்தார்.

அதுவரை நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள முடியாமலிருக்கும் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு விடுமுறை அளிக்குமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் சஜித் பிரேமதாஸ கோரிக்கை முன்வைத்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜே.சி. அலவத்துவல இந்த யோசனையை வழிமொழிந்தார்.

எனினும் சட்டமா அதிபரிடம் ஆலோசனைப் பெற்றபின் இதுகுறித்து பதிலளிப்பதாக சபாநாயகர் வெளியிட்ட கருத்தினால் சபையில் சற்று சலசலப்பு ஏற்பட்டிருந்தது.

இந்தச் சந்தர்ப்பத்தில் சபையில் எழுந்து கருத்து வெளியிட்ட விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே,

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சனுக்கு எதிரான வழக்கு ஒன்றை தாம் அண்மையில் மீளப்பெற்றுக்கொண்டதாக குறிப்பிட்டார்.

அந்தச் சந்தர்ப்பத்தில் அவருடன் நடத்திய கலந்துரையாடலில், தனக்குச் சார்பாக 103 சாட்சியங்கள் இருந்த போதிலும், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அந்த வழக்கில் தன் சார்பில் முன்னிலையாகி, 03 சாட்சியங்களையே மன்றில் முன்வைத்தாக அமைச்சர் மஹிந்தானந்த தெரிவித்தார்.

தாம் சிறையில் இருப்பதற்கான காரணம் சஜித் பிரேமதாஸவும், எம்.ஏ. சுமந்திரனுமே என்றும் ரஞ்சன் ராமநாயக்க தன்னிடம் தெரிவித்திருந்ததாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சபையில் கூறினார்.

எனினும் இந்தக் குற்றச்சாட்டை உடனடியாக நிராகரித்த எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ, ஆளுங்கட்சி முன்வைக்கின்ற குற்றச்சாட்டுக்களை ஹேன்சாட்டிலிருந்து நீக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..