சமையல் எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு

இந்த செய்தியை பகிருங்கள்!

சமையல் எரிவாயுவின் விலையை மீண்டும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த நாட்களில் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்ட பின்னரும் சந்தையில் எரிவாயுக்கான தட்டுப்பாடு நிலவியது.

இந்த நிலையில், இந்த விடயம் குறித்து ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் டப்ளியூ.கே.எச்.வேகப்பிடிவை,சமையல் எரிவாயுவின் விலையை மீண்டும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் வீழ்ச்சி மற்றும் சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்பு என்பனவற்றின் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..