சர்வதேசத்தின் பார்வைக்குள் சிக்குமா இலங்கை?

இந்த செய்தியை பகிருங்கள்!

இலங்கை மீதான தொடர்ச்சியான சர்வதேச கவனமும் அழுத்தமும் சிறுபான்மை சமூகங்கள், ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர் எதிர்கொள்ளும் அபாயங்களைக் குறைக்க உதவும் என்று சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை இலங்கையின் மோசமான மனித உரிமைகள் நிலைமையை கடுமையாக ஆய்வு செய்து உண்மையான முன்னேற்றங்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

எதிர்வரும் கூட்டத்தொடரில் அரசாங்கத்தின் தொடர்ச்சியான துஷ்பிரயோகங்கள் மற்றும், மக்கள் மற்றும் சட்டத்தின் ஆட்சி பலவீனமடைவது குறித்து தங்கள் எச்சரிக்கையை வெளிப்படுத்த வேண்டும்.

இதன் மூலம் இலங்கை அரசாங்கத்தின் சர்வதேச மனித உரிமை கடமைகளை நிறைவேற்றுவதற்கான அழுத்தத்தை கொடுக்க, தங்கள் விருப்பத்தை மற்ற நாடுகள் வெளிப்படுத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

அத்தோடு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வடக்கு மற்றும் கிழக்கில் சிறுபான்மையினரை கைது செய்து அவர்களை அச்சுறுத்தும் செயற்பாட்டை அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..