சாய்ந்தமருது மின் அத்தியட்சகராக ஜெயராஜ் பதவியேற்பு!

இந்த செய்தியை பகிருங்கள்!

வி.ரி.சகாதேவராஜா
இலங்கை மின்சார சபை சாய்ந்தமருது பாவனையாளர் சேவை நிலையத்தின் புதிய மின் அத்தியட்சகராக கோ. ஜெயராஜ் கடமையை பொறுப்பேற்றார்.

இலங்கை மின்சார சபையின் சாய்ந்தமருது பாவனையாளர் சேவை நிலையத்தின் மின் அத்தியட்சகர் எந்திரி ஏ.எச்.எம். பயாஸின் இடமாற்றத்தை அடுத்து,சாய்ந்தமருது பாவனையாளர் சேவை நிலையத்தின் புதிய மின் அத்தியட்சகராக எந்திரி கோ. ஜெயராஜ் ( Eng. K. Jeyaraj [MEM, MBA(r), BEng(Hons), GDip(EE), Ad.Dip( Tele.com syst), MIET, AMIESL, AEng(ECSL) ] கடமையை பொறுப்பேற்கும் நிகழ்வு (05 ) திங்கட்கிழமை சாய்ந்தமருது பாவனையாளர் சேவை நிலையத்தில் இடம்பெற்றது.

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் 3வருடம் கடமையாற்றி பின்னர் கடந்த நான்கு வருடங்களாக இங்னியாகல நீர்மின் நிலையத்தில் மின் அத்தியட்சகராக கடமையாற்றி வந்த கோ. ஜெயராஜ், சாய்ந்தமருது பாவனையாளர் சேவை நிலையத்தின் புதிய மின் அத்தியட்சகராக கடமைகளை பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் பதவியேற்கும் இந்நிகழ்வில் இலங்கை மின்சார சபையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..