சுவிஸ் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலய அனுசரணையில் உலர் உணவு பொதிகள் வாழங்கிவைப்பு.

இந்த செய்தியை பகிருங்கள்!

நிருபர்) நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வறிய குடும்பங்களுக்கு சுவிஸ் லுட்சேர்ன் எம்மன்புறூக்கே ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலய பிரதமகுரு மற்றும் அடியார்களின் அனுசரணையில் உலர் உணவு பொதிகள் இன்று வழங்கிவைக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமமான பட்டிப்பளை பிரதேசத்துக்கு உட்பட்ட கச்சக்கொடிசுவாமிமலை கிராமத்தில் உள்ள நாளாந்தம் கூலித்தொழில் புரியும் 85 வறிய குடும்பங்களுக்கே இவ் உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. சுவிஸ் லுட்சேர்ன் எம்மன்புறூக்கே ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலய ஸ்தாபகரும் பிரதம குருவும் ஆகிய ‘சிவாகம துரந்தரர்’சிவ ஸ்ரீ இராம சசிதரக்குருக்கள் மற்றும் இராஜராஜேஸ்வரி அம்பாள் அடியார்களே இதற்கான நிதியினை வாழங்கியிருந்தனர். பட்டிப்பளை பிரதேச இளைஞர்களின் வேண்டுகோலுக்கு இணங்க சுவிஸ் நாட்டில் வாழும் சமூக சேவகர் மா.குமாரசாமி அவர்களின் ஏற்பாட்டிலேயே இந்த உதவி வாழங்கப்பட்டது. கச்சக்கொடிசுவாமிமலை கிராமசேவை உத்தியோகஸ்தர் மற்றும் சமூர்த்தி உத்தியோகஸ்தர் ஊடாக இன்று மக்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்!

Leave a Reply

Your email address will not be published.

4 × four =

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..