சொந்த வீட்டிற்கே தீ வைத்த நபர்!

இந்த செய்தியை பகிருங்கள்!

திருகோணமலை- மஹதிவுல்வெவ பிரதேசத்தில் வீடொன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இத்தீ விபத்து நேற்றிரவு10.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மனைவி வீட்டை விட்டு வெளியேறி தனது உறவினர் ஒருவர் வீட்டில் தங்கியுள்ளார்.

இந்நிலையில் கோபம் கொண்ட கணவர் வீட்டைச் சுற்றி பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இதேவேளை தீ வைத்ததாக கூறப்படும் கணவர் பொலிஸ் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

குறித்த தீ விபத்து தொடர்பில் மொரவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றர்.

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..