ட்ரம்பின் தோல்வி ஜோர்ஜியாவில் உறுதியானது.

இந்த செய்தியை பகிருங்கள்!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் சுமார் 5 மில்லியன் வாக்குகள் ஜோர்ஜியாவில் பதிவாகிய பின்னர் மாநில தேர்தல் அதிகாரிகள், ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் ஜோர்ஜியாவில் ஜனாதிபதி ட்ரம்பை விட அதிக வாக்குகளை பெற்றதாக உறுதிப்படுத்தினர்.

தணிக்கை செய்யப்பட்ட முடிவுகளின்படி, பைடன் 12,284 வாக்குகள் முன்னிலை வகித்த ஜோர்ஜியா மாநிலத்தில் தேர்தல் வாக்களிப்பின் முடிவில் பொதுமக்களின் நம்பிக்கையை உறுதி செய்வதற்காக, தணிக்கைச் செயல்பாட்டின் ஒரு பகுதியாக பதிவான வக்குகளை மறுபரிசீலனை செய்ய மாநிலச் செயலாளர் உத்தரவிட்டார்.
இதன் விளைவாக முன்னர் வெளியான ஜோர்ஜியா தேர்தல் முடிவுகளில் 0.0099 சதவீதம் மாத்திரம் மாற்றம் ஏற்பட்டது.

இது குறித்து கருத்து தெரிவித்த ஜோர்ஜிய மாநில செயலாளர் பிராட் ராஃபென்ஸ்பெர்கர், பைடனின் வெற்றிக்கு அரசு சான்றளிக்கம் என்பதில் சந்தேகமில்லை என்று கூறினார்.
ஜனநாயகக் கட்சியின் வெற்றியைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட சட்டரீதியான சவால்களுக்கு டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்து வருகின்ற நிலையிலேயே இந்த முடிவுகள் வெளியாகியுள்ளன.

Subscribe

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..