தமிழரசுடன் இணைய நாடகம் போடும் கருணா; கிளிநொச்சியில் மாவைக்கு புகழாரம்.

இந்த செய்தியை பகிருங்கள்!

தேசிய கட்சிகளுடன் மட்டுமன்றி, தமிழ்க் கட்சிகளுடனேயே வரவிருக்கும் மாகாண சபை தேர்தல்களை சந்திக்கவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தொிவித்துள்ளாா்.

அந்தவகையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனும் இணையத் தயாராக இருப்பதாகவும் அவா் தொிவித்துள்ளாா்.கிளிநொச்சியில், இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தொிவித்துள்ளாா்.

மேலும் தெரிவிக்கையில்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தொடர்பில் தொடர்ச்சியாக விமர்சனங்களை முன்வைத்து வருகின்றீர்கள் இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்புடனும் இணைந்து போட்டியிட தயாராக உள்ளீர்களா என அவரிடம் ஊடகவியலாளர் வினவினார்,

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாம் உருவாக்கிய கட்சி. அவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டியும், விமர்சித்தும் உள்ளோம். அந்த வகையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனும் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதற்கும் தயாராகவே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ் கட்சிகள் ஒற்றுமையாக செயற்பட வேண்டும். அந்த ஒற்றுமைக்காக தமிழ்த் தலைவர்கள் முன்வர வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ்த் தலைமைகளின் கடந்த கால செயற்பாடுகள் அரசியல்களை விட்டு தற்போது காணப்படும் சூழலை கருத்தில் கொண்டு ஒற்றுமையாக செயற்பட முன்வர வேண்டும் எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..