தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வசமுள்ள உள்ளுராட்சி சபைகளை மீண்டும் கைப்பற்றுவோம்;  சாணக்கியன் சூளுரை

இந்த செய்தியை பகிருங்கள்!

நாட்டில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வசமுள்ள அனைத்து உள்ளுராட்சிசபைகளையும் மீண்டும் கைப்பற்றுவோம். அதற்காக அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுவருகிறோம். அந்தவகையில் காரைதீவும் இன்று எமது தவிசாளர் ஜெயசிறில் தலைமையில் மீண்டும் எமது வசமாகும்.

இவ்வாறு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் மடடு.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் காரைதீவில் சூளுரைத்தார்.

காரைதீவு பிரதேசசபையின் வரவுசெலவுத்திட்ட அமர்வையொட்டி நேற்று காரைதீவில் காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கே.ஜெயசிறிலையும் த.தே.கூ. உறுப்பினர்களான த.மோகனதாஸ் சி.ஜெயராணி ச.நேசராசா ஆகியோரையும் கட்சி முக்கியஸ்தர்களையும் சந்தித்துக்கலந்துரையாடினார். கூடவே அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசனும் சமுகமளித்திருந்தார்.

த.தே.கூ.உறுப்பினர்கள் அனைவரும் த.தே.கூ.சபையில் ஒன்றாகவே வாக்களிக்கவேண்டும் என்றுகோரும் கூட்டமைப்பின் செயலாளரரின் கடிதங்கள் அங்கு வழங்கிவைக்கப்பட்டன.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்:

எமது வசமுள்ள சபைகளை தக்கவைப்பதோடு நாம் இழந்த சபைகளையும் மீளப்பெறவேண்டிய வேலைத்திட்டங்களையும்முன்னெடுத்துவருகிறோம். உள்ளுராட்சிசபை என்பது மக்களின் அடிப்படைத்தேவைகளை நிறைவேற்றும் முக்கிய ஸ்தானமாகும். அதில் மிகவும்கூடிய கவனம் செலுத்தவேண்டும்.

துரதிஸ்டவசமாக அதன்தேர்தல்முறைமை அறுதிப்பெரும்பான்மையில்லாது ஏனையகட்சிகள்மீது தங்கியிருக்கவேண்டிய கட்டாயமுள்ளது. அதன்காரணமாகவே வரவுசெலவுத்திட்ட நிறைவேற்றம் என்பது முக்கியத்துவம் பெறுகிறது.

இங்குள்ள தவிசாளர் ஜெயசிறில் சாணக்கியமுள்ளவர். அவர் தமது உறுபபினர்களின் ஆதரவை ஏலவேபெற்றுள்ளஅதேவேளை ஏனையகட்சி உறுப்பினர்களுடனும் கலந்துரையாடியுள்ளார். எனவே திட்டம் நிறைவேறும் என்பதில் முழுநம்பிக்கையுள்ளது. என்றார்.

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..