கிண்ணியாவில் கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூவரசன்தீவு பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவரது சடலம் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.