திருமண பதிவு கட்டளைச் சட்டத்தின் கீழ் முஸ்லிம்கள் திருமணம் செய்ய அனுமதி

இந்த செய்தியை பகிருங்கள்!

திருமண பதிவு கட்டளைச் சட்டத்தின் கீழ் முஸ்லிம்கள் திருமணம் மற்றும் விவாகரத்து செய்வதற்கான முன்மொழிவு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின்படி எந்தவொரு குடிமகனும் இனம், மதம், மொழி, சாதி, பால் மற்றும் அரசியல் கொள்கைகள் அல்லது பிறப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்ட இடமளிக்கப்படாது என அரசாங்கம் கூறியுள்ளது.

இருப்பினும், முஸ்லீம் திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டம் பெண்களுக்கு பாகுபாடு காட்டும் குறிப்பிட்ட விதிகளை உள்ளடக்கியுள்ளது.

இத்தகைய விதிகளை சட்டத்திலிருந்து ரத்து செய்ய வேண்டியதன் அவசியத்தை முஸ்லிம் மகளீர் அமைப்புகளும் முஸ்லிம் சமூகத்தவர்கள் மற்றும் சட்டநிபுணர்களும் சுட்டிக்காயிருந்த நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பொதுத் திருமண பதிவுச் சட்டத்தின் கீழ் முஸ்லிம்களை திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கும் வகையில், சிவில் சட்டக் கோவையில் திருத்தம் செய்ய நீதி அமைச்சர் அலி சப்ரி முன்வைத்த திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..