துரோகமும் அரசியல் முலாமும்! .. அறிவு கூர்ந்த எம்மினத்திற்கு..!

இந்த செய்தியை பகிருங்கள்!

(இனியவன்)
இன்றய
வாழ்வில் ,தற்போதய சூழலில் எமது தமிழ் உறவுகள், அனைவரும் விழிப்படைந்து நேரிய பாதைதனில்ஒவ்வொரு தமிழ் இளையவர்கள், பெரியவர்கள் யாவரும் பயணிக்க வேண்டிய தேவையும், கடப்பாட்டிற்கும்தள்ளப்பட்டு, உற்றுநோக்கல் சிந்தனையின் விழிம்பில் நிற்கின்றோம். சில பல விடையங்களை எமது இனம்அறிந்து, அறிவுச் செயற்பாட்டிலும் செயற்பட வேண்டிய கட்டாய தேவை உள்ளது. ஒருவரது விடையம் சார்ந்துஅல்லது அவர்பற்றிய செயற்பாடுகளே வெளிக் கொண்டு வரும்போது எந்தவொரு காற்புணர்ச்சியோ , பழிவாங்கலோ, தனிப்பட்ட கோபதாபங்களோ இல்லை என்பதனை பரந்து பட்டு சிந்தித்தாக வேண்டும்.

அது தமிழ் மக்களின் கடமையும், கடப்பாடுமாகும்.

அந்தவகையில் தான் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் தளபதியாக மட்டக்களப்பு அம்பாரை மாவட்டதளபதியாக இருந்த கருணா என்பவர்  தனது சுகபோகங்களுக்காக விடுதலைப் புலிகளின் உயரியஒழுக்கவிதிகளை மீறியவர் என்பதனை புரிந்து கொள்ள வேண்டும். கருணா நீண்ட நெடும் விடுதலைப்பாதையில்எம்மினத்திற்கு கறைபடிந்த வடுக்களை இட்டு வைத்துள்ளார். பூகோள வடிவமைப்பில் தமிழர் தாயகமானவடகிழக்கு மண் நீண்ட நிலப்பரப்பை கொண்டிருந்தாலும் வடக்கும் ,கிழக்கும் வாவிகளாலும், நீர் ஏரிகளாலும்பிரிக்கப்பட்டிருந்தது இதன் சாதகந்தான் விடுதலைப்புலிகளின் தலமை ஒழுக்கம் தவறிய கருணாமீதுஒழுக்காற்று நடவடிக்கையினை உடனடியாக எடுக்க முடியாமலிருந்தது எனலாம். அதே சமயம் மட்டக்களப்புஅம்பாரையில் பெரும் போராளிள் படையணிகளின் கட்டமைப்பின் தளபதியாக இருக்கும் தளபதி ஒருவர்உயர்ந்த பண்பினையும், ஒழுக்கத்தினையும் கொண்டிருத்தல் வேண்டும். அவ்வாறே கருணா மீது தலமையும்கொண்டிருந்தது….

ஒன்று என்ன வென்றால் கருணாவுக்கு 28 வயதுக்க முன்பே 27 வது வயதில் திருமணம் நடந்தது.

ஆனாலும்இந்தக்காலம் மிகவும் போர் சூழ்ந்த காலமாகவே அமைந்திருந்தது. இலங்கையில் ஆட்சி மாற்றங்கள் வந்தவேளைகளிலெல்லாம் ஒப்பந்தங்களும், போர் இடைநிறுத்தல்களும் கூடவே ஆட்சியாளர்களால்ஏற்படுத்தப்பட்டு வந்தது அந்தத் தருணங்களில் வெளிநாடுகளிலே விடுதலைப் புலிகளுக்கும் இலங்கைஅரசிக்கும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. இப் பேச்சுவார்தைகளில் விடுதலைப்புலிகள் குழுவில் கிழக்குமாகாணம் சார்பில் கருணாவையே தலைவர் அவர்களால் நியமிக்கப்பட்டு பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடச்செய்தார். அந்தளவிற்கு தலைவர் கருணா மீது மிகுந்த நம்பிக்கையை வைத்திருந்தார். இதில் உற்று நோக்கவேண்டிய விடயம் என்னவென்றால் விடுதலைப்புலிகள் அமைப்பில் அரசியல் துறையில் அரசியல் சாணக்கியமும்,அனுபவமும் நிறைந்தவர்கள் இருந்தும் தலைவர் கருணாவையே தெரிவு செய்திருந்தார்.  கால ஓட்டத்தினைகருணா தனக்கு சாதகமாக்கி தலைகீழான செயற்பாடுகளில்  தன்னை ஆக்கிக் கொண்டு மிக மோசமான , இழிவான செய்கைகளை தனக்குத்தானே கட்டவிழ்து விட்டு இயக்க கட்டுப்பாடுகளை , விதி முறைகளை மீறிசெயற்பட்டார்.

படிப்படியாக கருணாவின் லீலைகள் மேலோங்கிக் கொண்டே சென்றன ஆசைகளும் மேலோங்க 2002 ஆண்டுரணில் அரசாங்கத்துடன் ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் காலப் பகுதியில் கருணா தலைமையின்எந்தவொரு அனுமதியுமின்றி , தலைமைக்கு தெரியாமல் தனது மனைவியையும் பிள்ளைகள் மூன்றையும்கொழும்பிலும், பின்பு வெளிநாட்டிற்கும் அனுப்பி  பெருந்தொகை பணத்தினை செலவு செய்து வீடு வாடகைக்குஅமர்த்தி படிக்கச் செய்து வந்தார். இதற்கு பெருந்தொகை பணம் தேவையாதலால் இயக்கப் பணத்தினைமோசடி செய்து வந்தார். இந்த கால இடைவெளியினுள் மட்டக்களப்பில் விடுதலைப்புலிகளின் பெண்கள்படையணித் தளபதியாக இருந்த சாளி உடனான இரகசிய உறவைப் பேணி தன்னகப்படுத்தி ஒழுக்கத்தை மீறிபாலியலில் ஈடுபட்டார்.

இது ஒரு கட்டத்திற்கு பின்பு தலைமைக்கு கருணாவின் சகல ஒழுக்க மீறல்செயற்பாடுகளும் படிப்படியாக தெரிய வந்தது. இதன் எதிரொலியாக பணம் சம்மந்தமான மோசடியை   அம்பிளாந்துறை கடுக்கா முனையைச் சேர்ந்த போராளி கருணாவின் வாகனச்சாரதி றஞ்சன் என்பவர்அறிந்திருந்தமையும், றஞ்சன் சக போராளியிடம் பண மோசடி சம்மந்தமாக வாய் திறந்திருந்ததை அறிந்தகருணா தனது எடுபிடியான குருவி என்னும் போராளியை வைத்து குளிர்பாணத்தினுள் (சயனட்டினை) அதாவதுவிடுதலைப்புலிகளின் கொள்கை சாவின் நஞ்சை கலந்து அப்போராளிக்கு தெரியாமல் குடிக்கச் செய்துசாகடிக்கச் செய்து மாரடைப்பால் சாவடைந்தார் என்று புதியதொரு துரோக நயவஞ்சக வரலாற்றைவிதைத்தார் கருணா.

இதில் இன்னுமோர் விடயத்தை குறிப்பிட்டாக வேண்டும் விடுதலைப்புலிகள் அமைப்பில் பல்பட்டபரிமானங்களைக் கொண்ட கட்டமைப்புக்களை உடையது இதில் மாவட்டம் சார்ந்து, படைத்துறை சார்ந்துநிருபாக, நிருபகிர்த்தல் கட்டமைப்புக்கள் உள்ளன . இவைகளையெல்லாம் உள்ளடக்கியதாகஇவைகளையெல்லாம் மொத்தமாக  நிருபகிக்கும் கட்டமைப்பு தமிழீழத்தில் மாவட்டம் ,மாவட்டமாக உள்ளன. அவைகளில் ஒன்றுதான் மட்டக்களப்பு அம்பாரை மாவட்ட நிருபாக பணிமனை இதற்கு  அக்கரைப்பற்றுகோளாவில் எனும் இடத்தைச் சேர்நத போராளி சிவான் என்பரே பொறுப்பாக இருந்தார். இவர் மிகவும் ஆற்றல்மிக்க அனுபவம் மிக்க போராளி. 10வருடங்களையும் , 28 வயதினையும் தாண்டி போராளியாக இருந்தகட்டத்தில்  இயக்க கோட்பாடகளுக்கு அமைவாக பெண்போராளி ஒருவரை காதலித்தார் . இதனை ஏற்கமுடியாத கருணா பல்வேறுபட்ட குற்றங்களை சிவான் மீது சுமத்தி  இயக்க ஒழுக்க விதிமுறைகளை மீறியவர், கட்டுப்பாடுகளை மீறியவர் என அடையாளப்படுத்தி விடுதலைப் புலிகளளின்  போராளிகளுக்கான ஒழுக்காற்றுநடவடிக்கையான

உயரிய தண்டனையான மரண தண்டனை கருணாவினால் வழங்கப்பட்டு  பல நூற்றுக்கணக்கான விடுதலைப்புலிகளின் ஆண், பெண் போராளிகள் முன்னே வைத்து சிவான் சுட்டுக் கொல்லப்பட்டார். கிழக்கு மாகணதளபதி என சித்தரிக்கப்பட்ட கருணா பண மோசடி செய்தும், பெண்கள் படையணித் தளபதியாக  கருணாவால் ஆக்கப்பட்ட சாளியுடன்  பாலியலில் ஈடுபட்டதிற்கும் வீணாக திட்மிட்டு கருணாவால் கொல்லப்பட்ட றஞ்சனுக்காகவும் கருணாவுக்கு என்ன தண்டனை வழங்க வேண்டும் ?

கருணா என்ன நினைவுகளையும், கனவுகளையும், கொள்கைகளையும் சுமந்து இவைகளை செய்தாரோ புரியாதபுதிரானாலும் விடுதலைப் புலிகள் இப் பாரிய குற்றச் செயல்களை அறிந்து கொள்ள மாட்டார்கள் என்ற மூடநம்பிக்கையை தன்னுள்ளே புதைத்து வைத்திருக்கின்றார் என தோன்றுகின்றது. கால ஓட்டத்தில்உண்மைகளும், துரோகங்களும் காலங்கைளை பின்போட்டுக் கொண்டாலும் உறங்கிப் போய்விடாது என்பதனை கருணாவின் விடையத்தில் கற்று கொள்ள வேண்டியதாகும்.

விடுதலைப் புலிகள் இயக்கம் எந்த விடையத்தினையும் உற்று நோக்காமல் நடவடிக்கை எடுப்பதில்லை. கருணாவின் விவகாரத்திலும் அப்படியே. கருணாவின் எல்லாச் செயற் பாடுகளையும் அறிந்து உண்மை என்பதனை உறுதிப்படுத்திய பின்பே கருணாவினை தேசியத் தலைவர் பிரபாகரன் வன்னிக்கு வரும்படி அழைப்பினை விடுத்திருந்தார்.

தனது குற்றச்செயல்கள் வெளி வந்து விடும் அதே நேரம் ஒழுக்காற்று நடவடிக்கையில் தண்டனை கிடைக்கும் என்ற பயத்தில் இந்த பயமும், கருணாவின் ஒழுக்கவீனங்களும், தலைமையின் அழைப்பினை அவமதித்த செயலும் விடுதலையமயை நேசித்த முழு தமிழீழ மக்களையும், ஆசா பாசங்கள் தாய், தந்தை, சகாதரர்கள், சொந்த , பந்தங்கள் ,நண்பர்கள், கல்வி தங்கள் எதிர்கால கனவுகள், இலட்சியங்களை உதறி தள்ளி எறிந்துவிட்டு தாயக விடுதலையினை நெஞ்சுரதகதில் கொண்டு  வலிகளையும் , வேதனைகளையும் சுமந்தவிடுதலைபுலி போராளிகளின் மனவலிமையையும் புடம்போட்டு தலை விதியினை மாற்றப் போவதை கருணாநினைத்திருப்பாரோ என்னமோ! சில வேளை இருந்திருக்கலாம்.

கருணா தலைவரின் அழைப்பினை ஏற்று வன்னிக்கு சென்றிருந்தால் கருணாவுக்கான ஓழுக்காற்றுநடவடிக்யினை அவரின் பதவி நிலையினை இல்லாமல் செய்து ஏதேனும் வேறுவிதமான தண்டனைகளைபோர்கால சூழலுக்கமைவாக அல்லது கருத்தில் கொண்டு தண்டனையினை தலைவர் ஏற்படுத்தி இருந்திருப்பார் என்பது தமிழ் மக்களனினதும், போராளிகளினதும் கருத்தாகவும், எண்ணங்களாகவும் அக் காலகட்டத்தில் உலாவி இருந்தது என்பது குறிப்பிடத்தக்க விடையம்.

மாறாக கருணா தமிழீழ அமைப்பில் இருந்து பிரிந்து செலல்லப் போவதாக ஊடகங்களுக்கு அறிவித்தார். இதனை துரோகம் என்று சொல்லாமல் என்னவென்று அல்லது எப்படி சொல்லப் போகின்றீர்கள்? ?

மட்டக்களப்பு அம்பாரையில் இருந்த போராளிகளை தன்னகப்படுத்தி  இயக்கதில் இருந்து பிரிந்ததை, ஒரு மாத காலத்திற்கு பின்பு வன்னியில் இருந்த மட்டக்களப்பு அம்பாரை மாட்ட ஜெயந்தன் படையணிப் போராளிகளும், பொறுப்பாளர்களும் தளபதிகளும், மீள மட்டக்களப்பிற்கு வந்தபோது  செய்வதறியாது கருணா    பிரச்சினைகளை பேசித்தீர்வு காண்பதற்காகவும், தலைவரின் கருணாவிற்கான நேரடி செய்தியினை எடுத்துச்சென்ற விடுதலைப்புலிகளின் மிக நீண்ட கால போராளியும், பன்முக ஆற்றல் கொண்டவரும், புலனாய்வுத்துறையின் தளபதிகளின் ஒருவருமான மடடக்களப்பு ஆரையம்பதியை சேர்ந்த  நீலன்

என்பவரை கைது செய்து வைத்திருந்து கொழும்பிற்கு தப்பி அப்போது பாராளுமன்ற உறுப்பினராக இருந்ந முஸ்லீம்மதத்தைச் சேர்ந்த தமிழை தாய் மொழியாக கொண்ட அலிசாகிர்மெளலானாவுடன்  ஓடும் போது ஓடும் அந்த கணத்தில் கால் கை கண்களை கட்டி சுட்டு விட்டு தப்பி ஓடியதை , தனது ஊரான கிரானைச் சேர்ந்த பெரும்பாலும் கருணாவின் (உறவுக்காரராக இருக்கலாம்) போராளி விஸ்ணுவின் தம்பியான  மருத்துவ போராளி செஞ்சுடர் என்பர் தனது போராளி நண்பரின் காதலியான பெண் போராளினினை அந்த பெண் போராளியின் வீட்டிற் போவதற்கு உதவியதற்காக தான் இருந்த முகாமின் முன்றலில் இருந்த கம்பத்தில் கட்டி வைத்து சுட்டதை துரோகம் இல்லை என்னவென்று சொல்வது.?

வட கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் மாறி, மாறி திருமணம் செய்து மட்டக்களப்பில்பலர் வர்த்தக தொழிலை பாரம்பரியாமாக செய்து இரண்டு, மூன்று தலை முறைக்குமேல் வாழ்ந்தவர்களை ஒரேஇரவில் உடுத்த துணியுடன் தனது கைக்கூலியாக செயற்பட்டு மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினராக இருந்த

ஜோசப் பரராசசிங்கம்  தேவாலயத்தில் பிராத்தனையின் போது சுட்டுக் கொல்லப்பட்டதன்சந்தேகத்தில் மட்டக்களப்பு சிறைச்சாலையில் 5 வருடங்களாக சிறைவாசம் பூண்டுள்ள பிள்ளையான் மற்றும்ஆயுதக்கடத்தலின் போது காத்தான்குடி பொலிசாரினால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தபோது சகசிறைக் கைதியால் சுட்டுக் கொல்லப்பட்ட சச்சுமாஸ்ரர், கொழும்பு கொட்டாவைப் பகுதில் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட குகநேசனும் அவரின் அருவருடிகள் சிலரும் சேரந்து துரத்தியது துரோகம் இல்லையா?

இது  யாவும் கருணாவின் நேரடி  கட்டளையிலே நடை பெற்றது. தனது குற்றங்களை மூடி மறைக்க பிரதேசவாசத்தினை கட்டவிழ்த்து சாயம் பூசியது என்ன? அது துரோகமில்லையா?? இப்படி சொல்லிக் கொண்டுபோனாலும் தன்னை தாயக தமிழ் மக்களிடத்திலும் புலம்பெயர் வாழ் தாயக தமிழ் மக்களிடத்திலும், உலகநாடுகள் வாழ் தமிழ்  மக்களிடத்திலும் அனைத்து சமுக உலக மக்களிடத்திலும் பெரும் குண்டையும், கபடநாடகத்தின் கதையையும் தூக்கி வீசி எறிந்தார் அதுவே வெளி நாடுகடளில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்களின்போது சமஸ்டித் தீர்வுக்கான பேச்சு வாத்தையை அடுத்த கட்ட பேச்சின் போதுமேற்கொள்வதற்கான ஓப்பந்தம்  ஒன்றில் பேச்சு வார்த்தைகளின் தலைவர் திரு அன்ரன் பாலசிங்கம் என்பவரைகையொப்பமிடுமாறு நிற்பந்தித்து கையொப்பம் இடச் செய்ததாகவும் அதனால் தலைவர் பிரபாகரன் தன்னைதுரோகம் செய்து விட்டாய் என பேசியதாகவும் அத்தோடு விடுதலைப் புலிகளின் பிரதித் தலைவராக இருந்துதலைவருக்கு துரோகம் செய்த  மாத்தையாவை தனக்கு ஒப்பிட்டு பேசியதாலே தான் இயக்கத்தி இருந்துபிரிந்ததாகவும் தப்பட்டம் அடிப்பது என்ன

காலத்திற்கும், நேரத்திற்கும் ஏற்றாப்போல் தன்னை நிறம் மாற்றிக் கொள்ளும் பச்சோந்தி

இதனை துரோகம் என்பதனை விட ஏதும் பெரிதாக உள்ளனவா???

என்பதனை எமது இனமும், எமது இனத்தின் மீது அக்கறையும், பற்றுதியும் உள்ள முன்னோடிகள் புரிந்துகொள்ள வேண்டும். விடுதலைப் போராட்டத்தையும். அதன் தலமையையும் காட்டி கொடுத்தது மட்டுமல்லாமல், பல்வேறுபட்ட உலக நாட்டு ஊடகங்களுக்கம் அப்பட்டமான பொய் செவ்விகளையும் வழங்கிய வாய் இன்றுதனது தேர்தல் பிரச்சார மேடைகளில் தேசியத் தலைவர் சிறந்த மனிதர், அவருக்கும் எனக்கும் சிறு கருத்துவேறு பாடுதான் இருந்தது , அவர் என்னை துரோகி என்று ஒருபோதும் சொல்லவில்லை என உளறுகின்றார். இதுவே மொட்டத் தலைக்கு முடி சூட்டுவதாக இருக்கின்றது.

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் தமிழர் தாயக விடுதலைப் போராட்டத்தில் தன்னை அர்பணித்தகாலந்தொடக்கம் துரோகிகளை களைந்தாரே தவிர துரோகி என்று யாரையும் சொன்னதாக வரலாறு இல்லை. அந்தளவு முதிர்ச்சியும், பக்குவமும் நிறைந்தவர் என்பதும் கருணாவுக்கு நன்கு தெரிந்த விடையம்.

துரோகமும்லீலைகளும்மற்றுமோர்  பாகமாக. தொடரும்…..

இந்த செய்தியை பகிருங்கள்!

One Reply to “துரோகமும் அரசியல் முலாமும்! .. அறிவு கூர்ந்த எம்மினத்திற்கு..!”

Comments are closed.

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..