நடிகர் சூர்யாவுக்கு கொரோனா உறுதி

இந்த செய்தியை பகிருங்கள்!

நடிகர் சூர்யாவுக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
சூர்யா நடித்த சூரரைப் போற்று படம் கடந்த மார்ச் மாதம் ஓ.டி.டி. தளத்தில் திரைக்கு வந்தது. இதனையத்து அவர் தற்போது ஞானவேல் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

சூர்யாவின் குழந்தைகள் மும்பையில் பாட்டி வீட்டில் உள்ளனர். அவர்களை பார்ப்பதற்காக சில தினங்களுக்கு முன்பு மும்பை சென்றார். நேற்று முன்தினம் மும்பையில் இருந்து சென்னை திரும்பினார்.

இதன்போது அவருக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் சூர்யாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து சென்னை வடபழனியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பாக ருவிட்டரில் பதிவிட்டுள்ள சூர்யா, “கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம்.

அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும்” என பதிவிட்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..