நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது இன்று மாலை வாக்கெடுப்பு

இந்த செய்தியை பகிருங்கள்!

வலுசக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது இன்று (20)மாலை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.

சபாநாயகர் அறிவிப்பு உட்பட பிரதான சபை நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைமீதான விவாதம் ஆரம்பமானது.

மாலை 5.30 மணிவரை விவாதம் தொடர்ந்தது. ஆளும் மற்றும் எதிரணி உறுப்பினர்கள் விவாதத்தில் பங்கேற்று உரையாற்றினர்.

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக எதிரணி உறுப்பினர்களும், எதிராக ஆளுங்கட்சி உறுப்பினர்களும் உரையாற்றியதுடன் அதற்கான காரணங்களையும் முன்வைத்தனர்.

இன்று இரண்டாவது நாளாகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது விவாதம் தொடர்ந்து, இன்று மாலை வாக்கெடுப்பும் நடத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..