நல்லாட்சி அரசாங்க அரசியல்வாதிகள் பலர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்பு

இந்த செய்தியை பகிருங்கள்!

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் நல்லாட்சி அரசின் பிரபல அரசியல்வாதிகள் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக நடத்தப்பட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளின் பிரகாரம் ‘நல்லாட்சி’ அரசாங்கத்தின் பல பிரபல அரசியல்வாதிகள் மற்றும் பல சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் நேரடியாக அந்த சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். குறிப்பாக தாக்குதலைத் தடுக்கத் தவறியது தொடர்பான குற்றச்சாட்டுகள் தீவிரமானவையென குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் 32 பேர் நேரடியாக மனிதப் படுகொலையாளிகளாகவும் தாக்குதல்களை திட்டம் தீட்டியவர்களாகவும் குற்றஞ்சாட்டப்படவுள்ளதுடன், தாக்குதல்களுடன் தொடர்புற்று தடுத்து வைக்கப்பட்டுள்ள 241 பேர் மீதும் வழக்கு தொடரப்படவுள்ளது.

தாக்குதல்களுடன் தொடர்புடைய 273 சந்தேகநபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணைகள் தொடர்பாக தயாரிக்கப்பட்ட எட்டு கோப்புகள் ஏற்கனவே சட்ட மாஅதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளன.

உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்களுடன் தொடர்புடைய ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

தாக்குதல்கள் தொடர்பாக 754 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவர்கள் விசாரிக்கப்பட்டு குற்றச்சாட்டுகளுடன் தொடர்பு படாவிடின் விடுவிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..