நாள் 4: மன்னாரை நோக்கி பேரணி!

இந்த செய்தியை பகிருங்கள்!

நானாட்டான் சந்தியை பேரணி சென்றடைந்தது. அங்கு பெருமளவு பொலிசார் குவிக்கப்பட்டிருந்தனர். எனினும், அங்கும் பேரணி இடம்பெற்று, தொடர்ந்து முன்னேறி வருகிறது.

மடு தேவாலய பிரார்த்தனைகளை முடித்துக் கொண்டு முருங்கனை நோக்கி பேரணி நகர்கிறது.

11.50 AM

வவுனியாவிலிருந்து புறப்பட்ட பேரணி, பூவரசங்குளம், செட்டிக்குளம் வழியாக மன்னார் மாவட்டத்திற்குள் நுழைந்துள்ளது. அங்கு நீதிமன்ற உத்தரவை காண்பித்து பேரணி நுழைய பொலிசார் தடுத்து நிறுத்த முயன்றனர். எனினும், பேரணி நகர்ந்தது. வாகன இலக்கங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.

மடு சந்தியில் பேரணி இடம்பெறுகிறது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணி வவுனியாவிலிருந்து ஆரம்பமாகியுள்ளது. வவுனியா நகரத்திற்குள் வலம் வந்த பேரணி தற்போது, மன்னார் வீதியால் முன்னகர்ந்து வருகிறது.

இன்றைய பேரணியில் பெரும் திரளானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

குறிப்பாக, முஸ்லிம் மக்களும் கணிசமானளவானர்கள் கலந்து கொண்டிருந்தனர். வவுனியா பள்ளிவாசலின் அருகிலும் பேரணி தரித்து நின்று ஜனசா எரிப்பு உள்ளிட்ட விடயங்களில் கோசமெழுப்பப்பட்டது. அந்த மசூதியின் பிரதான மௌலவியும் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..