நிலையான நீதியை சர்வதேசம் பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தும் இளைஞர் குழு

இந்த செய்தியை பகிருங்கள்!

பாறுக் ஷிஹான்

நிலையான நீதியை சர்வதேசம் பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தி இளைஞர் குழு ஒன்று சுழற்சி முறை போராட்டத்தில் இணைந்துள்ளது.

அம்பாறை மாவட்டம் பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன்றலில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற சுழற்சி முறையில் இடம்பெற்று வருகின்ற உணவு தவிர்ப்பு போராட்டம் 13 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

கடந்த வெள்ளிக்கிழமை(5) ஆரம்பமாகி இப்போராட்டம் இடம்பெற்று வந்த நிலையில் 13 ஆவது நாளான இன்று(17) மட்டக்களப்பு மற்றும் அம்பாறை புற நகரங்களில் இருந்து வருகை தந்த இளைஞர் குழுவுடன் இணைந்து முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சுமித்ரா ஜகதீசன் நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் என். தர்சினி தமிழ் தேசிய மக்கள் முன்னணி இளைஞர் தலைவர் துசானந்தன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்ட இளைஞர்கள் நீதியான விசாரணை இடம்பெற வேண்டும் என தத்தமது கருத்தில் கூறினர்.

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..