பஷிலுக்கு கிடைக்கவுள்ள மற்றுமொரு உயர் பதவி

இந்த செய்தியை பகிருங்கள்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக பஷில் ராஜபக்க்ஷ நியமிக்கப்படவுள்ளார் என்று அரசியல் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பஷில் ராஜபக்க்ஷ அண்மையில், தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டதுடன், நிதியமைச்சராகவும் பதவியேற்றிருந்தார்.

இந்த நிலையில் அவரை பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக நியமிக்குமாறு, சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்த்தனவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், பஷில் ராஜபக்க்ஷவை நாடாளுமன்றக் குழுத் தலைவராக அங்கீகரிக்கும் அறிவிப்பை சபாநாயகர் விரைவில் வெளியிடுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..