பஸ் கட்டணங்களை உயர்த்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை

இந்த செய்தியை பகிருங்கள்!

பஸ் கட்டணங்களை 15 வீதத்தினால் உயர்த்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எரிபொருட்களுக்கான விலை அதிகரிக்கப்பட்டுள்ள காரணத்தினால் இவ்வாறு பஸ் கட்டணங்களை உயர்த்துமாறு தனியார் பஸ் சங்கங்கள் கோரியுள்ளன.

எரிபொருள் விலையேற்றத்தினால் குறுகிய தூரம் பயணிக்கும் பஸ்களுக்கு 700 ரூபாவும், நீண்ட தூரம் பயணிக்கும் பஸ்களுக்கு 1200 ரூபாவும் மேலதிகமாக செலவாகின்றது என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தகவல்களை அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியன்ஜித் தெரிவித்துள்ளார்.

கட்டண அதிகரிப்பு குறித்து ஏனைய பஸ் சங்கங்களுடனும் பேச்சுவார்த்தை நடாத்தியதன் பின்னர் பஸ் கட்டண உயர்வு குறித்து போக்குவரத்து துறைசார் அதிகாரிகளிடம் கோரிக்கை அதிகாரபூர்வமாக முன்வைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..