பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு பத்ம விபூஷண் விருது

இந்த செய்தியை பகிருங்கள்!

மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு இந்திய அரசின் பத்ம விபூஷண் விருது வழங்கப்படுகிறது.

கலாசாரம், இசை, நடனம், அரசியல், சமூகம், நிர்வாகம், கலை, சினிமா, நாடகம், ஓவியம், சிற்பம், சட்டம், நீதி, பொது சேவை சமூக நலம் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்த முறையில் பங்காற்றியவர்களைக் கண்டறிந்து ஆண்டுதோறும் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இவை பொதுவாக பத்ம விருதுகள் என்று அழைக்கப்படுகின்றன.

இவ்வருட பத்ம விருதுகள் விபரம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது,

இம்முறை பத்ம விபூஷண் 7 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்படுகிறது.

எஸ்.பி. பாலசுப்ரமணியத்துடன் ஜப்பான் முன்னாள் பிரதமர் சின்சோ அபே, கர்நாடகாவின் பெல்லே மோனப்பா ஹெக்டே, அமெரிக்காவின் நரீந்தர்சிங் கப்னாய், டெல்லி மவுலானா வகிதுதீன் கான், டெல்லி பிபி லால், ஒடிஷா மணற்சிற்ப கலைஞர் சுதர்ஷன் சாஹூ ஆகிய 7 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை பத்ம பூஷண் 10 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. பத்மஸ்ரீ 102 பேருக்கு வழங்கப்படுகிறது. அதில் தமிழகத்தை சேர்ந்த 11 பேருக்கு விருது வழங்கப்படுகிறது,

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..