பிரதமருக்கும் கிழக்கு ஆளுநருக்கும் இடையே இடம்பெற்ற கலந்துரையாடல்!

இந்த செய்தியை பகிருங்கள்!

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பதுக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையே (02) அலரி மாளிகையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

கிழக்கு மாகாணத்தின் எதிர்கால அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பில் ஆளுநரினால் இதன்போது பிரதமருக்கும் தெளிவுபடுத்தப்பட்டதுடன், கிழக்கு மாகாண அபிவிருத்தி செயற்பாடுகளை விரைவுபடுத்துவதற்கு தேவையான எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இயற்கை அழகு கொண்ட கிழக்கு மாகாணத்தில் சுற்றாடல் துறையை மேம்படுத்துதல் மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துள்ள தொல்பொருள் பாரம்பரியத்தை பாதுகாப்பது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

குறித்த சந்தர்ப்பத்தில் பிரதமரின் செயலாளர் காமினி செனரத் அவர்களும் கலந்து கொண்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..