பிரான்ஸில் யாழ்பாணத்தை சேர்ந்த ஒருவர் கொலை ; மூவர் கைது

இந்த செய்தியை பகிருங்கள்!

பிரான்ஸின் தலைநகர் பரிஸின் புறநகர் பகுதியான குசன்வீலில் இலங்கையை சேர்ந்த ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அந்தப் பகுதியில் வீடொன்றில் இருந்து 56 வயதுடைய ஒருவரது சடலம் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர். கொலை செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம் – தெல்லிப்பளையை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடந்த புதன்கிழமை பிற்பகல் கிடைத்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற அவசர மீட்புப் பணியாளர்கள் உயிரிழந்தவரது சடலத்தை கண்டனர்.

அவர் அந்த வீட்டில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று சந்தேகிக்கப்படுகிறது. அங்கு தங்கியிருந்த 52 மற்றும் 42 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களும் இலங்கையை சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தமிழர்களான இவர்கள் இருவரும் கொலை செய்யப்பட்டவரது வீட்டில் வாடகை இன்றி வசித்துவந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..