பிறந்து 8 நாட்களேயான குழந்தைக்கு கொரோனா தொற்று !

இந்த செய்தியை பகிருங்கள்!

திருகோணமலை மாவட்டம் மஹதிவுல்வௌ பிரதேச வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட பிறந்து 8 நாட்களேயான குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மஹதிவுல்வௌ-தெவனிபியவர பகுதியில் வசித்து வரும் 23 வயதுடைய பெண்ணின் குழந்தை காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்நிலையில் அங்கு மேற்கொள்ளப்பட்ட ரெபிட் அன்டிஜன் பரிசோதனை மூலம் இந்த குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அந்த குழந்தையின் தாய்க்கு மேற்கொள்ளப்பட்ட ரெபிட் அன்டிஜன் பரிசோதனையில் அவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..