பிள்ளையானுக்கு விழுந்த பேரிடி! பிரசாந்தன் அணியில் முக்கியஸ்தர்கள் !

இந்த செய்தியை பகிருங்கள்!

நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையானுக்கு மக்கள் மக்கள் வாக்குப் ​போட்டு அவர் தெரிவு செய்யப்பட்டாலும் அவரால் சிறையில் இருந்து வௌியில் வரமுடியாது, சிறைக்கு சென்றவரால் எதுவுமே செய்ய முடியாது என்ற காரணத்தாலும் பிள்ளையானை விட பிரசாந்தன் கூடிய வாக்கினைப் பெற்றால்

பிரசாந்தன்தான் பாராளுமன்ற உறுப்பினராக வலமுடியும் என்ற காரணங்களால் ரி.எம்.வி.பி கட்சியின் செயலாளர் பிரசாந்தனின் திட்டப்படி ஆரையம்பதி, முனைக்காடு. ​ போன்ற பல இடங்களில் சில முக்கியஸ்தர்களுக்கு அன்பளிப்புகளை கொடுத்து தனக்கு மட்டும் அதாவது தனது இலக்கத்திற்கு மட்டும் வாக்கினை போடும்படி பணித்துள்ளார் பிரசாந்தன்.

அதன்படி கடந்த இரண்டு நாட்கள் தொடக்கம் மட்டக்களப்பில் சல இடங்களில் பிரசாந்தனுக்கு மட்டும் இரகசியமான முறையில் பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றதாக பிள்ளையானின் தீவிர ஆதரவாளர்கள் சிலர் கூறியுள்ளனர்.

பிரசாந்தன் தனது இலக்கத்திற்கு மட்டும் புள்ளடி இடும்படி பிரச்சாரம் ​செய்யப்பட்ட விடயத்தை நேற்று திங்கட்கிழமை இரவு ஒரு சிறைச்சாலை முக்கியஸ்தர் ஊடாக பிள்ளையானிடம் கூறப்பட்டுள்ளது, இதனால் தற்போது பிரசாந்தனுக்கும் பிள்ளையானுக்கும் இருந்த உறவில் சற்று விரிசல் ஏற்பட்டுள்ளது.

தனித்து வாக்கு கேட்பது தொடர்பாக அண்மையில் ஆரையம்பதி – மண்முனைப் பற்று பொது அமைப்புக்கள் சிலவற்றையும் பிரசாந்தன்நேரடியாக சந்தித்து பேசியுள்ளார்.

இதே​வேளை தற்போது ரி.எம்.வி.பிக்குள் பிரசாந்தன் அணிவேறாகவும் பிள்ளையான் அணி வேறாகவும் செயற்பட்டுவருகின்றனர் பிள்ளையான் அணியில் பலர் முன்னாள் போராளிகள் உள்ளனர் .

இந்த விடயம் அக் கட்சியின் வேட்பாளரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கிருஸ்ணப்பிள்ளை ஐயாவுக்கு தெரியவந்தபோது எதற்காக நாம் இந்த அணியில் வந்துசோர்ந்தோம் என அவர் தற்போது அதிர்ந்து போயுள்ளார்.

அத்துடன் பிள்ளையானின் உத்தரவுக்கமைய சுவிஸ் அமைப்பு ஊடாக பெருந்தொகை பணம் பிரச்சாரத்திக்கான செலவுக்கு வழங்கப்பட்டது. அந்தப் பணத்தில் பிரசாந்தனும், திரவியமும் ​பெரும் தொகையை ​பெற்றுககொண்டனர்.

இதே வேளை கிருஸ்ணப்பிள்ளை ஐயாவுக்கு பிரச்சாரத்திற்காக சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை எனவும், முகநூல், இணையத்தளம், சமூக வலைத்தளங்கள் ஊடாக பிரச்சாரம் செய்வதற்கு பிரசாந்தன் 5 நபர்களை தலா 25,000/= ரூபா கொடுத்து வைத்திருந்த விடயமும் தற்போது தெரியவந்துள்ளது.

எது எவ்வாறு நடந்தாலும் எமது மக்கள் தெரிவாக உள்ளனர் யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்று. என்பது மட்டும் உண்மை.

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..