புதுவருட காலத்தில் நாடு முடக்கப்படுமா? இராணுவத் தளபதி விளக்கம்

இந்த செய்தியை பகிருங்கள்!

எதிர்வரும் தமிழ் சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு இலங்கையின் பகுதிகளை பகுதியளவிலோ அல்லது முழுமையாகவோ முடக்கும் எந்த தீர்மானத்தையும் அரசாங்கம் இதுவரை எடுக்கவில்லை என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு கொவிட் ஒழிப்பிற்காகவும், தொற்று பரவுவதைத் தடுக்கவும் விசேட எழுமாற்றான அன்டிஜன் பரிசோதனையை நடத்தவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கொழும்பில் இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதேவேளை கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக 6 மில்லியன் ´ஸ்புட்னிக் V´ தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக கொழும்பில் இன்று நடந்த ஊடக சந்திப்பின்போது அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..