புலம்பெயர் உறவுகள் மூலம் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கல்.

இந்த செய்தியை பகிருங்கள்!

விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் சமூகநலப் பிரிவின் வருடாந்த செயற்பாடாக சுவாமி விவேகானந்தரின் ஜனன தினத்தை முன்னிட்டு பாடசாலைகளில் கல்வி கற்கும் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வின் 2வது நிகழ்வாக வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் ஏற்பாட்டின் கீழ் இன்று (13.01.2021) நடைபெற்றது.

கற்றல் உபகரணங்களை மட்டக்களப்பு கல்லூரியின் சமூக நலப் பிரிவான விவேகானந்தர் சமுதாய நிறுவனத்தின் ஊடாக வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர் உறவுகளை உதவி மூலம் 35 மிகவும் வறுமை நிலையில் உள்ள மாணவர்களிற்கு வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வானது விவேகானந்த சமுதாய நிறுவகத்தின் மாணவர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல் என்னும் தொனிப்பொருளில் அவர்களின் கல்வி நடவடிக்கை கற்றல் உபகரணங்கள் இல்லாமல் தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று உலகிற்கு உணர்த்திச் சென்ற வீரத் துறவி சுவாமி விவேகானந்தர் அவதரித்த ஜனவரி 12 ஆம் திகதியினை கருத்தில்கொண்டு வருடா வருடம் ஜனவரி மாதம் சுவாமி விவேகானந்தரின் நினைவு தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கப்படுகின்றன என்றும் அது மட்டுமல்லாது மாணவர்களை பொறுப்பெடுக்கும் திட்டமும் முன்னெடுக்கப்படுவதாகவும் இவற்றிற்கு வெளிநாடுகளில் உள்ள பல்வேறு புலம்பெயர் உறவுகள் தொடர்ச்சியான உதவிகளை வழங்கிக்கொண்டிருப்பதாலே இவ்வாறான சேவைகளை தங்கள் முன் எடுத்துக் கொண்டிருப்பதாகவும், நிறுவகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் க.பிரதீஸ்வரன் அவர்கள் தெரிவித்ததோடு, உதவிக்கொண்டிருக்கும் அனைத்து புலம்பெயர் உறவுகளிற்கும் மாணவர்கள் சார்பாக நன்றியினையும் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..