மட்டக்களப்பில் கோவிட் தடுப்பூசி ஏற்றும் பணி

இந்த செய்தியை பகிருங்கள்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் சைனோபாம் தடுப்பூசி ஏற்றும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளிலும் இன்றைய தினம் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் உள்ள ஆபத்து நிறைந்த பகுதிகளில் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இன்றைய தினம் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கூழாவடி விக்னேஸ்வரா மண்டபத்தில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இன்றைய தினம் பெருமளவானோர் ஆர்வத்துடன் தடுப்பூசி ஏற்றுக்கொள்வதற்கு வருகைதந்ததை காணமுடிந்தது.

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..