மட்டக்களப்பில் பிரபல போதைப்பொருள் வியாபாரி கைது!

இந்த செய்தியை பகிருங்கள்!

ஓட்டமாவடி எஸ்.எம்.ரீ.ஹாஜியார் வீதியில் வீட்டில் வைத்து 41 வயதுடைய பிரபல போதைப்பொருள் வியாபாரி ஒருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலுக்கமைய புலனாய்வு பிரிவினரும், வாழைச்சேனை பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடம் இருந்து ஹெரோயின் போதைப்பொருள் 4 கிராம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இவருடன் தொடர்புடையவர்கள் தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அனுராதபுர பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய சந்தேகநபர் பிரபல போதைவஸ்து வியாபாரி என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..