மட்டக்களப்பில் மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு மாணவர்கள் அழைப்பு!

இந்த செய்தியை பகிருங்கள்!

மட்டக்களப்பில் ஆசிரியை ஒருவர் மாணவருக்கும் அவரின் தாயாருக்கும் மிரட்டல் விடுத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பின் பிரபல பாடசாலை ஒருவரின் ஆசிரியையே இவ்வாறு தொலைபேசியில் தாயாருக்கும் மகனுக்கும் அச்சுறுத்தலை விடுத்துள்ளார்.
குறித்த மாணவனின் தாயாரும் ஒரு ஆசிரியை என கூறப்படுகின்ற நிலையில் இந்த சம்பவம் பெரும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை அச்சுறுத்தல் விடுத்த ஆசிரியை கிழக்கு சுகாதார உயரதிகாரி சுகுணன் அவர்களின் மனைவி என்பதுடன் முன்னாள் பிரதி அமைச்சருக்கும் மிகவும் நெருக்கமானவர் எனவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதனை கண்டித்து சம்மந்தப்பட்ட திருமதி ஆசிரியர் சுகுணன் அவர்களை மட்டக்களப்பு கல்வி வலையத்தில் இருந்து அகற்றுமாறு கோரி மட்டக்களப்பு மாணவர் சமூகம் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. எதிர் வரும் 26 ம் திகதி காலை 10.மணிக்கு காந்தி பூங்காவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்படுகிறது. அனைத்து மாணவர்கள் மற்றும் பழையமாணவர்கள் கலந்து கொண்டு மாணவர் பலத்தின் முன்னால் இவ்வான கடத்தல் கும்பல்களிள் அடிவருடிகளின் அச்சுறுத்தல் எதுவும் செய்ய முடியாது என்பதனையும் சம்மந்தப்பட்ட ஆசிரியரை மட்டக்களப்பு கல்வி வலையத்தில் இருந்து அகற்றுமாறு கோரி நாம் ஒன்றுபட்டு அணிதிரள்வோம் வாரீர் !

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..